நாம் இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருவர் எந்த வயது வரை சேர முடியும் என கல்லூரி கல்வித்துறை தொிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர், 28, 2025 அன்று கல்லூரி கல்வி ஆணையர் எ சுந்தரவல்லி, அனைத்து அரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான உச்ச வயது வரம்பை தளர்வு செய்து ஆணை வெளியிட்டுள்ளார்.Read also: How to Select Best Course in Colleges அதன்படி, ஆணையில் கூறப்பட்டுள்ளாதவது, 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை்கான அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும், மாற்றுத்திறனானி மாணவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் வயது தளர்வும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, பிஎஸ்சி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி மற்றும் பெண் விண்ணப்தாரர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் வயது தளர்வும் அளித்து ஆணையிடுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கல்லூரி முதல்வர்கள் இந்த ஆணையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.