மண்டல அறிவியல் மையம், கோயம்புத்தூர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மண்டல அறிவியல் மையம், கொடிசியா சாலை, கோயம்புத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கணித திறனறி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கணித திறனறித் தேர்வு வரும் ஜனவரி 5, 2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் 5 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இத்தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறும். இத்தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் டிசம்பர் 20ம் தேதிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசு ஒருவருக்கு ரூ 2000, இரண்டாம் பரிசு இருவருக்கு ரூ ஆயிரம், மூவருக்கு தலா ரூ 250, நான்காம் பாிசாக 20 பேருக்கு தலா ரூ 250 வழங்கப்படும். கூடுதல் தகவல் பெற, 8523909178, 0422-2963026, 2963024 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.