You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தமிழக அரசு இலவச போட்டி தோ்வு: தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

akalya birthday today 2026

தமிழக அரசின் போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு தரப்பில் ெதரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

அதாவது சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநில கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. 

இப்போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஆறு மாதம் காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைெபற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 2024ஆம் ஆண்டு சனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும், மேற்படி போட்டி தேர்வர்கள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதி இல்லை. 

தேர்வர்கள் www.cecc.in வாயிலாக ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளம் முகவரியில் அறியலாம்.